கம்பம் திராட்சையானது (கம்பம் பன்னீர் திராட்சை) சமீபத்தில் புவிசார் குறியீடைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கம்பம் பள்ளத்தாக்கு 'தென்னிந்தியாவின் திராட்சை நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதன்முதலில் பன்னீர் திராட்சையானது 1832 ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு பாதிரியாரால் அறிமுகம் செய்யப் பட்டது.
இந்தத் திராட்சையில் வைட்டமின்கள், டார்டாரிக் அமிலம் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதோடு, சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் திறனையும் இது உடையதாகும்.