உலக பாரம்பரிய சின்னமான பிரயா விகாரில் உள்ள பழமையான சிவன் கோவிலை பாதுகாத்து மீள்கட்டமைத்திட கம்போடியாவிற்கு உதவிடும் வகையில் இந்தியா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த பிரயா விகார் கோவில் கிபி 11வது நூற்றாண்டின் முதல் பாதி காலகட்டத்தைச் சார்ந்ததாகும்.
இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கம்போடியாவின் சர்வதேச ராஜ்ஜிய மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான நிறுவனத்திற்கும் (National Institute of Diplomacy and International Relations - NIDIR) இந்திய வெளியுறவுப் பணி நிறுவனத்திற்கும் இடைப்பட்டதாகும்.