ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஐரோப்பிய விண்வெளிச் செயல்பாட்டு மையம் ஆனது, கயா விண்கலத்தின் சார்பு நிலை அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்தி, சூரியனைச் சுற்றிய ஒரு 'செயலிழப்பு சுற்றுப்பாதையினுள்' அதனை அனுப்பியுள்ளது.
2013 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் ஆனது, சுமார் இரண்டு பில்லியன் நட்சத்திரங்கள் மற்றும் பிற வானியல் பொருட்களின் நிலைகள், தூரங்கள், இயக்கங்கள் மற்றும் பண்புகளை வரைபடமாக்கியுள்ளது.
இது பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டாம் லக்ராஞ்சே புள்ளியில் நிலை நிறுத்தப் பட்டிருந்தது.