கஜகஸ்தான் நாடானது, கரகாண்டா பிராந்தியத்தில் இதுவரையில் கண்டறியப்படாத அதன் மிகப்பெரிய அருமண் தனிம இருப்பினைக் கண்டுபிடித்துள்ளது.
முதற்கட்ட மதிப்பீடுகள் ஆனது, இர்கிஸ் பகுதியில் மட்டும் சுமார் 800,000 டன் அருமண் உலோகங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.
பெரிய ஜானா கஜகஸ்தான் கனிம இருப்புப் பகுதியில் சுமார் 300 மீட்டர் ஆழத்தில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவில் அருமண் உலோகங்கள் இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கனிம இருப்பில் சீரியம், லாந்தனம், நியோடைமியம் மற்றும் இட்ரியம் போன்ற மதிப்புமிக்கக் கனிமக் கூறுகள் உள்ளன.