ஐக்கிய நாடுகளின் கீழ் செயல்படும் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது சமீபத்தில் கரி நிலங்கள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புவியின் மேற்பரப்பில் 3% நிலப்பரப்பை மட்டுமே இந்த கரி நிலங்கள் கொண்டிருந்தாலும் பல நூற்றாண்டுகளாக பூமிக்கடியில் புதைந்துள்ள கார்பனை வெளிவரத் தூண்டுகின்றன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
எப்போது கார்பன் வெளியேறுகின்றதோ, அப்போது அவை பசுமை இல்ல வாயுக்களை உமிழும்.
இவை 1 ஜிகா டன் அளவுள்ள கார்பனை வெளியேற்றும் திறன் கொண்டது.
உலக மண்வள கார்பனின் மொத்த அளவில் 30 சதவிகிதத்தைக் கரி நிலங்கள் கொண்டுள்ளன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
இந்தோனேசியாவானது 40% வெப்ப மண்டல கரி நிலங்களைக் கொண்டு உள்ளது.