TNPSC Thervupettagam

கரிநுண்தூள் செறிவு

March 4 , 2020 1730 days 600 0
  • கங்கோத்ரிப் பனிப் பாறைக்கு அருகில் கரிநுண்தூள் (Black carbon) செறிவானது கோடையில் காட்டுத் தீ மற்றும் விவசாயக் கழிவுகளை எரிக்கும் முறையான “பயிர்த்தாள் எரிப்பு” ஆகியவற்றின் காரணமாக 400 மடங்கு உயர்ந்துள்ளது.
  • வாடியா இமயமலை புவியியல் நிறுவனத்தைச் சேர்ந்த (WIHG - Wadia Institute of Himalayan Geology) விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவானது வெளியிடப் பட்டுள்ளது.
  • உலகில் கறுப்பு கரி நுண்தூள்களை அதிக அளவில் வெளியிடும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
  • அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த உமிழ்வானது வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது என்று ‘வளிமண்டல ஆராய்ச்சி’ இதழ் கூறுகின்றது.
  • இந்திய - கங்கைச் சமவெளியானது இதற்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்றும் இது கூறுகின்றது.

கரிநுண்தூள்

  • கரிநுண்தூள் ஆனது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் உயிர்வளங்கள் ஆகியவற்றின் முழுமையற்ற எரிப்பின் மூலம் ஏற்படுகின்றது.
  • CO2 வாயுவிற்குப் பிறகு காலநிலை மாற்றத்திற்கு இது இரண்டாவது பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்