கரிமக் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் உமிழ்வினை குறைத்தலுக்கான பிரகடனம்
November 28 , 2024 24 days 94 0
COP29 மாநாட்டிற்கு தலைமை தாங்கும் அஜர்பைஜான் கரிமக் கழிவுகளிலிருந்து வெளி வரும் மீத்தேன் உமிழ்வினைக் குறைக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலாவதாக 30க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கையொப்பமிட்டுள்ளன.
இந்த சில நாடுகள் கரிமக் கழிவுகளிலிருந்து வெளி வருகின்ற உலகளாவிய மீத்தேன் உமிழ்வுகளில் 47 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
மேலும், அஜர்பைஜான் நாடானது உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து, விவசாயிகளுக்கான பாகு ஹர்மோனியா பருவநிலை முன்னெடுப்பினை அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு பருவநிலை நடவடிக்கையின் முகவர்களாக விவசாயிகளின் அடிப்படைப் பங்கை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.