TNPSC Thervupettagam

கருக்கலைப்பு மாத்திரைக்கு ஒப்புதல்

May 1 , 2023 576 days 311 0
  • ஜப்பானிய சுகாதார அமைச்சரவையின் குழுவானது, ஆரம்ப நிலைக் கர்ப்பத்தினைக் கலைப்பதற்கான ஒரு மாத்திரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கருக்கலைப்பு மாத்திரையானது முதன்முறையாக அந்த நாட்டில் கிடைக்கப் பெற உள்ளதோடு, அறுவை சிகிச்சை முறைக்கு மாற்றாக அது வழங்கப்படும்.
  • ஜப்பானில், 1948 ஆம் ஆண்டு இன மேம்பாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படியிலான சில நிபந்தனைகளின் பேரில் மட்டுமே கருக்கலைப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப் படுகிறது.
  • இங்கு செயற்கை முறை கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • 22 வாரங்கள் வரையிலான ஒரு கருவினைக் கலைப்பது சட்டப் பூர்வமானது ஆனால் அதற்குப் பெரும்பாலும் மனைவி அல்லது கணவரிடம் இருந்து ஒப்புதல் பெறுவது மிக அவசியம் ஆகும்.
  • இதுவரை இத்தகையக் கருக்கலைப்பிற்கு அறுவை சிகிச்சை மட்டுமே பயன்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்