TNPSC Thervupettagam

கருங்காய்ச்சலுக்கு புதிய வகை வைரஸ் காரணம் – விஞ்ஞானிகள்

October 29 , 2017 2582 days 937 0
  • கருங்காய்ச்சலின் (காலா-அஸார்) நிலைத்தன்மைக்கு லெப்சே என்எல்வி1 (Lepsey NLV1) என்ற இதற்கு முன் அறியப்படாத புதிய வகை வைரஸ் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • எனினும், ஒட்டுண்ணிகள் எப்படி தொற்றுகிறது என்றும் உடலின் உள்ளே எப்படி மறைந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் விஞ்ஞானிகள் இன்னும் தெளிவாக கண்டறியவில்லை.
  • கருங்காய்ச்சல் (காலா-அஸார்) விசரல் வெஷ் மேனியாசிஸ் (Visceral leishmaniasis - VL) என்று அழைக்கப்படுகிறது. இது லெஷ்மேனியா முன்னுயிரி (Protozoan) ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
  • இது பாதிக்கப்பட்ட மணல் கொசுக்களால் மனிதர்களுக்குப் பரவுகிறது.
  • இது உடல் எடையிழப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், காய்ச்சல் மற்றும் இரத்த சோகை போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மைகளைக் கொண்டது.
  • இந்த ஒட்டுண்ணிகளானது சிகிச்சை அளிக்காவிட்டால், கல்லீரல் மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவற்றிற்குள் ஊடுருவி மரணத்தை ஏற்படுத்திவிடும்.
  • இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நான்கு நாடுகளில் உள்ள 119 மாவட்டங்களில் இந்த நோய் பரவி இருக்கிறது.
  • இது இந்தப் பகுதிகளுக்குரிய நோயாகும்.
  • உலகில் பாதிக்கும் மேற்பட்ட கருங் காய்ச்சல் பாதிப்புகள் இந்தியாவில் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்