உலக சுகாதார அமைப்பானது (WHO) கிழக்கு ஆப்பிரிக்காவில் கருங்காய்ச்சல் நோயை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புதிய கருங்காய்ச்சல் (உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ்) கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் கிழக்கு ஆப்பிரிக்காவின் துணைப் பிராந்தியத்தில் VL பாதிப்பு எண்ணிக்கைகளை 90 சதவிகிதம் குறைத்து, ஆண்டிற்கு சுமார் 1,500க்கும் குறைவான எண்ணிக்கையாக குறைப்பது என்பது இதன் இலக்குகளில் அடங்கும்.
இந்தி மொழியில் காலா-அசார் என்று அழைக்கப்படுகிற இது பாதிக்கப்பட்ட பெண் மணல் ஈக்கள் கடிப்பதால் பரவுகிறது மற்றும் 80 நாடுகளில் இதன் தொற்று பரவுகிறது.
2022 ஆம் ஆண்டில், உலகளாவிய VL பாதிப்புகளில் 73 சதவீதப் பாதிப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவானது என்ற நிலையில் இதில் 50 சதவீதமானது 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்பட்டது.
முன்னதாக, 2004 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உலகளாவியப் பாதிப்புகளில் வங்காளதேசம், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 70 சதவீதப் பங்கினை கூட்டாகக் கொண்டிருந்தன.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வங்காளதேசம் VL நோயினை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததையடுத்து அந்த நாடு இந்த சாதனையினை எட்டிய உலகின் முதல் நாடு என்ற பெருமையினை அடைந்தது.