TNPSC Thervupettagam
February 21 , 2018 2342 days 734 0
  • இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையேயான இராணுவ கூட்டுப் பயிற்சியான கருட சக்தியின் 6வது பதிப்பை இந்திய இராணுவத்தின் சிறப்பு பணிப் பிரிவும் (Special task force) இந்தோனேசிய இராணுவமும் இணைந்து இந்தோனேசியாவின் பாண்டுங்கில் தொடங்கியுள்ளன.
  • கருடசக்தி என்பது இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையேயான இருதரப்பு ராணுவப் பயிற்சியாகும்.
  • இந்த கூட்டு இராணுவப் பயிற்சியானது பிப்ரவரி மாதத்தில் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதத்தின் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இரு நாட்டு இராணுவங்களும் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும், கடல்சார் பாதுகாப்பில் இரு நாட்டு இராணுவங்களின் இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரிப்பதும், இந்த கருடசக்தி போர்ப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
  • இருநாட்டு இராணுவங்களுக்கிடையேயான இராணுவ ரீதியிலான இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக (Military Diplomacy) இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்