TNPSC Thervupettagam

கருணைக் கொலை தொடர்பான கர்நாடகா அரசின் விதிகள்

February 2 , 2025 21 days 90 0
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று, அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்வுரிமையானது மிகவும் கண்ணியத்துடன் இறக்கும் உரிமையையும் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • கண்ணியத்துடன் இறக்கும் ஒரு உரிமை என்பது குணமடைவதற்கான அறிகுறிகள் இல்லாத வகையிலான கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் வாழ்நாள் முழுவதும் துயரங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கானதாகும்.
  • கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் கண்ணியத்துடன் இறக்க அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் அத்தீர்ப்பைச் செயல்படுத்த கர்நாடக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்தது.
  • கேரள மாநிலத்திற்கு அடுத்தபடியாக இந்த முக்கியமான உத்தரவை செயல்படுத்தும் இரண்டாவது மாநிலம் கர்நாடகா ஆகும்.
  • அந்நோயாளியின் மிக நெருங்கிய உறவினர்கள் அல்லது நோயாளியின் முன்கூட்டிய மருத்துவ விருப்புரிமையில் பரிந்துரைக்கப்பட்ட அந்நபரின் ஒரு ஒப்புதலைப் பெற்ற பிறகு அந்தச் சிகிச்சையை நிறுத்தி வைப்பது குறித்து இரண்டு நிலை கொண்ட சில மருத்துவக் குழுக்கள் முடிவுகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்