போர்ச்சுகல் நாடானது, கொடிய மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கருணைக் கொலை அனுமதியளிப்பதைச் சட்டப் பூர்வமாக்கும் ஒரு சட்டத்தினை இயற்றியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் தீவிர நோய் வாய்ப்பட்டு, தாங்க முடியாத துயரத்தில் இருந்தால், அவர்கள் இறப்பதற்கு உதவி கோர அனுமதிக்கப் படுவார்கள்.
அத்தகைய முடிவை எடுப்பதற்கு அவர்கள் மனதளவில் தகுதியற்றவர்கள் என்று கருதப் படாவிட்டால், "நீடித்த" மற்றும் "தாங்க முடியாத" வலியினால் பாதிக்கப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
இந்தச் சட்டமானது அந்த நாட்டின் குடிமகன்கள் மற்றும் அந்த நாட்டின் சட்டப்பூர்வக் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதோடு தற்கொலை செய்து கொள்வதற்காக அரசு அனுமதியினைப் பெற அந்த நாட்டிற்கு வருகை தரும் வெளி நாட்டினருக்குப் பொருந்தாது.