TNPSC Thervupettagam

கருந்துளை இணைகள் கண்டுபிடிப்பு

October 5 , 2017 2549 days 869 0
  • இந்தியாவை பூர்வீகமாக கொண்ட  ஆராய்ச்சியாளர் ஒருவர்  உள்ளடங்கிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குழுவானது அண்டவெளியின் மையத்தில் ஐந்து கருந்துளை இணைகளை கண்டறிந்துள்ளனர்.
  • இவை ஒவ்வொன்றும் சூரியனை விட மில்லியன் மடங்கு நிறையுடையவை.
  • இக்கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்வாறு கருந்துளைகள் வளர்கின்றன என்றும், எப்படி அவைகளால் வலிமையான புவிஈர்ப்பு அலைகளை வெளியிட முடிகின்றது என்பதைப் பற்றிய அறிய நல்ல புரிதல்களை பெற உதவும்.
  • இக்கருந்துளை இணைகள் விண்வெளியில் உள்ள இரு அண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பின்பு இணைவதால் உருவாகும்  பெரும் நிறையுடைய இரு  கருஇந்துளைகள்  ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கிவரும் போது உருவாகின்றன.
  1. நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வுக்கூடம்,
  2. பரந்த – புல அகச்சிவப்பு வானவியல் ஆய்வு (Wide Field Infrared Sky Explorer Survey)
  3. அரிஸோனாவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரும் இருமை நோக்கு தொலைநோக்கி
போன்றவற்றை உள்ளடக்கிய பல ஆய்வகங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் தொகுப்பின் மூலமாக இந்த கருந்துளை இணைகள் கண்டறியப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்