அமெரிக்க விஞ்ஞானிகள் நீண்ட காலத்திற்கு முன் இறந்த விலங்கின் உறைந்த செல்களைப் பயன்படுத்தி அருகி வரும் கருப்பு கால் ஃபெரெட் விலங்கை வெற்றிகரமாக நகலி (குளோன்) செய்துள்ளனர்.
இதற்கு எலிசபெத் ஆன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது வில்லா என பெயர் கொண்ட கருப்பு-கால் ஃபெரெட் விலங்கின் செல்லில் இருந்து உருவாக்கப் பட்டது.
இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது.
இவ்வாறு உள்நாட்டைச் சேர்ந்த அருகி வரும் ஓர் உயிரினம் அமெரிக்காவில் நகலி செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.