TNPSC Thervupettagam

கருப்புப் பூஞ்சை நோய் – ஹரியானா

May 17 , 2021 1197 days 636 0
  • ஹரியானாவின் சுகாதாரத் துறை அமைச்சரான அனில் விஜ் அவர்கள் கருப்புப் பூஞ்சை நோயானது ஒரு அறிவிக்கப்பட்ட நோயாகப் பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
  • இந்த நோயானது கண்டறியப் பட்டால் மருத்துவர்கள் சம்பந்தப் பட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
  • அறிவிக்கப்பட்ட நோய்களாவன அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் எனவும் அழைக்கப் படுகின்றன.
  • இதன் பொருள் இது மாதிரியான நோய்கள் ஏற்பட்டால் சட்டப்படி அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்பதாகும்.

கருப்புப் பூஞ்சை

  • கோவிட்-19 தொற்றானது சில நோயாளிகளின் உடலில் மியூகோர்மைகோசிஸ் (அ) கருப்புப் பூஞ்சை என்ற ஒரு தொற்றினைத் தூண்டியுள்ளது.
  • மியூகோர்மைகோசிஸ் என்பது சுற்றுச்சூழலில் காணப்படும் மியூகோர்மைசெடிஸ்ஸ் எனப்படும் பூஞ்சைகளால் உண்டாக்கப்படும் தீவிரமான அதே சமயம் அரிதான ஒரு பூஞ்சைத் தொற்றாகும்.
  • இது முன்கூட்டியே கண்டறியப்பட்டால் கண்பார்வை இழப்பு, மூக்கு (அ) தாடையில் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றையும் மூளை பாதிப்படைவதால் ஏற்படும் 50% உயிரிழப்பினையும் தடுக்க இயலும்.
  • இது முக்கியமாக உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் (அ) கிருமிகளையும் நோய்களையும் எதிர்த்திட வேண்டி உடலின் திறனைக் குறைக்கும் வகையிலான மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்றோரைத் தாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்