TNPSC Thervupettagam

கரும்புற்றுநோய்க்கான தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி

May 1 , 2024 207 days 285 0
  • மருத்துவர்கள், கரும்புற்றுநோய்க்கான உலகின் முதல் தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசியினை நூற்றுக்கணக்கான நோயாளிகளிடம் செலுத்திச் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
  • உலகளவில் பதிவாகும் தோல் புற்றுநோய் சார்ந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ள கரும்புற்றுநோய், ஆண்டுதோறும் சுமார் 132,000 பேரைப் பாதிக்கிறது.
  • mRNA-4157 (V940) எனப்படும் இந்தத் தடுப்பூசி, நோயாளியின் உடலில் உள்ள குறிப்பிட்ட புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக என்று நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு தூண்டுவிக்கும் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையாகும்.
  • இது கட்டிகளில் காணப்படும் தனித்துவமான குறிப்பான்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தால் அடையாளம் காணப்படக் கூடிய  பல்வேறு நியோ ஆன்டிஜென்களை குறி வைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்