TNPSC Thervupettagam

கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒழித்தல்

August 10 , 2023 345 days 247 0
  • உலக சுகாதார அமைப்பானது (WHO), ஒரு பொது சுகாதாரப் பாதிப்பாக நிலவிய கருவிழித் தொற்றுப் பாதிப்பினை வெற்றிகரமாக அகற்றிய 18வது நாடாக ஈராக் நாட்டினை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
  • இந்தச் சாதனையானது, உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதியில் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது நாடாக ஈராக் நாட்டினை இடம் பெறச் செய்துள்ளது.
  • கூடுதலாக, ஈராக் நாட்டினை உலக அளவில் குறைந்தபட்சம் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயை (NTD) அகற்றிய 50வது நாடாகவும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
  • 2021-2030 ஆம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கானச் செயல் திட்டத்தில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 100 நாடுகள் இதே போன்ற மைல்கற்களை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கிய குறிப்பிடத் தக்கப் படிநிலையை இந்தச் சாதனை குறிக்கிறது.
  • கருவிழித் தொற்றுப் பாதிப்பு (ட்ரக்கோமா) என்பது க்ளமிடியா டிராக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு பாக்டீரிய கண் தொற்று ஆகும்.
  • இது முதன்மையாக கண்ணின் மேற்பரப்பையும் கண்ணிமையின் உட்புறத்தையும் பாதிக்கிறது.
  • இது பாதிக்கப்பட்ட நபர்களின் கண் அல்லது மூக்கில் சுரக்கும் நீர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது நோய் பரப்பிகள் மற்றும் ஈக்கள் அல்லது குளியல் துண்டுகள் அல்லது துணிகள் போன்ற அசுத்தமானப் பொருட்களின் மூலம் மறைமுகமாகவோ பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்