TNPSC Thervupettagam

கருவிழித் தொற்றுப் பாதிப்பு இல்லாத இந்தியா

October 14 , 2024 69 days 125 0
  • இந்தியாவானது கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனை என்பதில்லிருந்து நீக்கியதன் மூலம், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாக மாறியுள்ளது.
  • கருவிழித் தொற்றுப் பாதிப்பு (ட்ரக்கோமா) என்பது க்ளமிடியா ட்ரக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் அதிகத் தொற்றுத்திறன் மிக்க பாக்டீரியக் கண் தொற்று ஆகும்.
  • இது ஒரு காலத்தில் இந்தியாவில், குறிப்பாக மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் வாழும் பின்தங்கியச் சமூகங்களில் ஏற்பட்ட பார்வை இழப்பிற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது.
  • ட்ரக்கோமாவினை ஒழிப்பதற்கான இந்தியாவின் பணிகள் ஆனது 1963 ஆம் ஆண்டில் தேசியக் கருவிழித் தொற்றுப் பாதிப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொடக்கத்துடன் தொடங்கியது.
  • 1971 ஆம் ஆண்டில், கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் ஏற்பட்ட பார்வை இழப்பு 5% ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, உலகளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்