சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் ஆனது 1994 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மற்றும் திசு மாற்று சட்டத்தினை (THOTA) திருத்தியமைக்க உள்ளது.
குடும்பத்தினரின் அனுமதியின்றி இந்தியாவின் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் அனைத்து இந்திய நோயாளிகளிடமிருந்தும் கருவிழிப் படலத்தினை எடுப்பதை இது எளிதாக்குகிறது.
இந்தப் புதிய முயற்சியின் மூலம், மருத்துவமனைகளில் உயிரிழக்கும் அனைத்து குடி மக்களிடமிருந்தும் தமது குடும்பத்தாரின் அனுமதியின்றி கருவிழிப் படலத்தினை மீட்டெடுக்க முடியும்.
அதாவது மருத்துவமனையில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரும் கருவிழிப் படல தானம் செய்பவராகக் கருதப்படுவார்கள்.
எனினும், கருவிழிப் படலத்தினை தானம் செய்ய விரும்பாதவர்கள் உயிருடன் இருக்கும் போது தானம் செய்ய விருப்பமில்லை என்று பதிவு செய்திருக்க வேண்டும்.
தற்போது இந்தியாவில் நிகழும் உறுப்பு தானம் மூலமாக 50% தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகின்ற நிலை உள்ளது.