TNPSC Thervupettagam

கர்நாடக அணு உலை உலக சாதனை

December 15 , 2018 2044 days 568 0
  • கர்நாடகாவின் கைகாவில் அமைந்துள்ள அழுத்தப்பட்ட கனநீர் உலையானது (Pressurised Heavy Water Reactor -PHWR) உலகில் நிறுத்தப்படாமல் மிக நீண்ட நாள் இயங்கிய உலையாக ஆகியுள்ளது.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கைகா - 1 அலகானது 2016 ஆம் ஆண்டு மே 13 முதல் தொடர்ந்து 941 நாட்களுக்கு செயல்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்னர் 2016-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஹேய்ஷாம் – 2 ன் 8-வது அலகு உலையானது 940 நாட்களுக்கு நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இயங்கி ஒரு முத்திரையைப் பதித்தது.
  • அக்டோபரில் இந்த அலகு ஆனது தொடர்ச்சியான PHWR ன் செயல்பாட்டில் ஒரு புதிய உலக சாதனையைப் புரிந்தது (895வது நாள் தொடர்ச்சியான செயல்பாட்டின் முடிவில்).
  • PHWR-க்கான முந்தைய சாதனையானது 1994ஆம் ஆண்டில் கனடாவின் பிக்கெரிங்-இன் அலகு - 7ஆல் 894 நாட்களுக்கு இடைநில்லா இயக்கத்தினால் படைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்