கர்நாடக மாநில அரசானது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBCs) இட ஒதுக்கீட்டைத் தற்போதுள்ள 32 சதவீதத்திலிருந்து 51% ஆக அதிகரிக்க முன் மொழிந்து உள்ளது.
இதன் விளைவாக மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீடு ஆனது 85% ஆக உயரும் என்ற நிலையில் இதில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் ஆகிய இரு பிரிவினருக்கு 24 சதவீதமும் அடங்கும்.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையானது மாநில மக்கள் தொகையில் சுமார் 70% ஆகும் என்று கூறுகிறது.