TNPSC Thervupettagam

கர்நாடக மாநிலத் தகவல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள்

October 24 , 2019 1734 days 556 0
  • கர்நாடகாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒன்பது தகவல் ஆணையர்கள் அம்மாநில தலைமை தகவல் ஆணையரான என் சி சீனிவாஸுக்கு எதிராக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
  • இக்கடிதமானது அம்மாநில தலைமைத் தகவல் ஆணையரின் “தவறான நடத்தை” மற்றும் தலைமை தகவல் ஆணையராக “அவரது இயலாமை” ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.
  • ஒரு அரசாணையின் மூலம் கர்நாடக தகவல் ஆணையமானது மாநில அரசால் அமைக்கப் பட்டு இருக்கின்றது.
  • இந்த மாநில தகவல் ஆணையமானது ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் (State Chief Information Commissioner - SCIC) மற்றும் ஆளுநரால் நியமிக்கப்படும் 10க்கும் மேற்படாத மாநிலத் தகவல் ஆணையர்கள் (State Information Commissioners - SIC) ஆகியோரைக் கொண்டிருக்கும்.
  • தகவல் உரிமைச் சட்டம், 2005 ஆனது மாநில அளவில் ஒரு மாநிலத் தகவல் ஆணையத்தை உருவாக்க வழிவகுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்