மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்D.குமாரசாமி கர்நாடகாவின் 24வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் G.பரமேஸ்வரா துணை முதல்வராக விதான் சௌதாவில் பதவியேற்றுக் கொண்டார்.
குமரண்ணா என்று அழைக்கப்படும் குமாரசாமிக்கு ஆளுநர் வஜீபாய் வாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கடைசியாக 2007ம் ஆண்டிலிருந்து 20 மாதங்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில் கர்நாடகாவின் முதல்வராக இந்த பதவியேற்பு அவரது இரண்டாவது முறையாகும்.
சமீபத்தில் கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளுள் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக, 112 என்ற தனிப் பெரும்பான்மைக்கு 9 இடங்கள் மட்டும் குறைவான நிலையில், 104 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் 78 இடங்களுடனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களுடனும், இரண்டு சுயேச்சை உறுப்பினர்களை சேர்த்து கொண்டு மொத்தம் 117 உறுப்பினர்களை கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது.
ஆறுமுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் குமார், பாஜகவின் வேட்பாளரான சுரேஷ் குமார் தனது முன் மொழிதலை பின் வாங்கிய பிறகு கர்நாடக சட்டசபையின் சபாநாயகராக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.