அருகி வரும் இந்திய ஓநாய்கள், கர்நாடக மாநிலத்தின் பங்கபூர் ஓநாய் வனவிலங்குச் சரணாலயத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன.
இந்தச் சரணாலயத்தில் இந்தியச் சாம்பல் நிற ஓநாய் இனங்கள் காணப்படுகின்றன என்ற நிலையில் அங்குள்ள ஓநாய்களில் ஒன்று சமீபத்தில் எட்டு குட்டிகளை ஈன்றது.
இந்தச் சரணாலயத்தில் ஓநாய்கள், சிறுத்தைகள், மயில்கள், புல்வாய்கள், நரிகள், முயல்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு உயிரினங்கள் காணப் படுகின்றன.