கர்நாடகாவின் விதான் சபாவில் (சட்டப் பேரவை) காங்கிரஸ் - ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
225 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டெடுப்பின் போது கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்கள் - 15 உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். 5 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பைத் தவிர்த்திருந்தனர்.
99 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், 105 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
S. நிஜலிங்கப்பா (1962-68), D. தேவராஜா உர்ஸ் (1972-77) மற்றும் சித்தராமையா (2013-18) ஆகியோர் மட்டுமே கர்நாடக வரலாற்றில் தங்களது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்த முதல்வர்கள் ஆவர்.
குறிப்பு
நம்பிக்கை வாக்குத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமோ அல்லது எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அரசின் நம்பிக்கையை நிரூபிக்குமாறு கோரினாலோ சட்ட சபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.