TNPSC Thervupettagam

கர்நாடகாவில் லிங்காயத் மடம்

February 27 , 2020 1645 days 624 0
  • வடக்கு கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் இளைஞர் லிங்காயத் மடத்திற்குத் தலைமை தாங்க உள்ளார்.
  • சித்ரதுர்காவின் ஸ்ரீ ஜகத்குரு முருகராஜேந்திர மாதாவின் 361 மடங்களில் ஒன்று இதுவாகும்.
  • திவான் ஷரீஃப் ரஹிமன்சாப் முல்லா என்பவர் கடக் மாவட்டத்தின் அசுதி கிராமத்தில் உள்ள முருகராஜேந்திர கோரனேஸ்வர சாந்திதாமா மாதாவின் தலைவராக அல்லது மாததீஷாவாக ஏற்றுக் கொள்ளப் படுவார்.
  • இது கலபுர்கியில் உள்ள கஜூரி கிராமத்தில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான கோரனேஸ்வர சன்ஸ்தான் மடத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
  • அனைத்து அமைப்புகளின்/மடங்களின் ஒரு வலுவான, உண்மை நிறைந்த குரு பசவேஸ்வரர் என்ற ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டுமே ஆவார். இந்த அமைப்புகள்/ மடங்களைச் சேர்ந்த அனைவருமே லிங்காயத் மதத்தைப் பரப்புவதற்கும் வசனா இலக்கியத்தை நம்புவதற்கும் முயற்சி செய்கின்றார்கள்.
  • பசவண்ணா என்பவர் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவனை மையமாகக் கொண்ட பக்தி இயக்கத்தின் லிங்காயத் துறவி ஆவார். மேலும் இவர் கல்யாணிச் சாளுக்கிய/ காலச்சுரி வம்சத்தின் ஆட்சியில் சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.
  • பசவண்ணா இலக்கியப் படைப்புகளில் கன்னட மொழியில் இயற்றப்பட்ட வசனா சாகித்யாவும் அடங்கும்.
  • இவர் பக்திபந்தாரி, பசவண்ணா அல்லது பசவேஸ்வரா என்றும் அழைக்கப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்