TNPSC Thervupettagam

கர்பா நடனம்

December 8 , 2023 226 days 147 0
  • இந்தியாவின் கர்பா நடனம் ஆனது சமீபத்தில் தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சாரப் பாரம்பரியங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவால் இது அறிவிக்கப் பட்டது.
  • இது குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள கலைஞர்களால் நிகழ்த்தப்படும் சடங்கு சார்ந்த மற்றும் பக்தி சார் நடனமாகும்.
  • யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்த இந்தியாவின் 15வது கலாச்சார அம்சம் குஜராத்தின் கர்பா நடனமாகும்.
  • கடைசியாக, கொல்கத்தாவின் துர்கா பூஜை ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சாரப் பாரம்பரியம் (ICH) என்பது வாய்வழி மரபுகள், கலை நிகழ்ச்சிகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகை நிகழ்வுகள், இயற்கை மற்றும் பிரபஞ்சம் பற்றிய தகவல்கள் மற்றும் நடைமுறைகள் அல்லது பாரம்பரிய கைவினைகளை உற்பத்தி செய்வதற்கான திறனறிவு மற்றும் திறன்களை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்