TNPSC Thervupettagam

கர்பினி-GA2 செயற்கை நுண்ணறிவு மாதிரி

March 1 , 2024 140 days 426 0
  • கருவின் கர்ப்பகால வயதைத் துல்லியமாகக் கணிப்பதற்காக, ஆராய்ச்சியாளர்கள் இந்தியா சார்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த மாதிரியானது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் உள்ள நாடுகளுக்கிடையேயான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பிறப்பு சார்ந்த பல்வேறு கண்காணிப்புச் செயல்பாடுகள் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ஓர் இடைநிலைக் குழுவின் ஒரு பகுதியான இது DBT இந்தியா முன்னெடுப்பு (GARBH-Ini) திட்டம் எனப்படுகிறது.
  • கர்ப்பினி-GA2 என்பது இந்திய மக்கள் தொகைத் தரவைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட முதல் மூன்று மாத கால கர்ப்பகால வயது மதிப்பீட்டு மாதிரி ஆகும்.
  • கர்ப்பினி-GA2 மாதிரியானது, சுமார் மூன்று மடங்கு வரை பிழையைக் குறைப்பதன் மூலம் கருவின் வயதை துல்லியமாக மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்