TNPSC Thervupettagam

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

February 6 , 2024 165 days 280 0
  • இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, 9 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி வழங்குதலை ஊக்குவிக்கும் அரசின் முன்னெடுப்பினை அறிவித்துள்ளது.
  • இது HPV (மனித சடைப்புத்துத் தீநுண்மம்) வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை உள்ளடக்கியது.
  • இந்த தடுப்பூசியானது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய மக்கள் தொகையில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 511.4 மில்லியன் பெண்கள் இந்நோயினால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஒவ்வோர் ஆண்டும் 1,23,907 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர் என்பதோடு மேலும் 77,348 பேர் இந்த நோயால் உயிரிழக்கின்றனர்.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், இந்தியாவில் பெண்களிடையே அடிக்கடி ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்