TNPSC Thervupettagam

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி பிரச்சாரம்

January 22 , 2024 312 days 230 0
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு குறிப்பிடத் தக்க படிநிலையாக, 9 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்தினை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளது.
  • இந்த நோய்த்தடுப்பு பிரச்சாரமானது, மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • உலகில் உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது.
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.25 லட்சம் புதிய பாதிப்புகள் மற்றும் 75,000 உயிரிழப்புகள் பதிவாகின்றன.
  • மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக, இந்தியாவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படக் கூடியப் புற்றுநோயாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளது.
  • இந்தியாவில் காணப்படும் 83 சதவீத பரவக் கூடிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளுக்கு HPV 16 அல்லது 18 காரணமாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்