TNPSC Thervupettagam

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி

July 17 , 2022 736 days 469 0
  • சீரம் இந்திய நிறுவனமானது, பெண்கள் மத்தியில் நிலவும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைத் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, இந்தியாவில் வெளியிடப்படும் முதலாவது நான்முனை இணைப்புடைய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி (qHPV) இதுவாகும்.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது தடுக்கக் கூடியதாக இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தப் புற்றுநோய் ஆனது பொதுவாக 15 முதல் 44 வயதுடைய பெண்களிடையேக் கண்டறியப்படுகிறது.
  • தேசியப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் இந்தியாவில் முதன்முதலாக 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்