சீரம் இந்திய நிறுவனமானது, பெண்கள் மத்தியில் நிலவும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைத் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, இந்தியாவில் வெளியிடப்படும் முதலாவது நான்முனை இணைப்புடைய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி (qHPV) இதுவாகும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது தடுக்கக் கூடியதாக இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தப் புற்றுநோய் ஆனது பொதுவாக 15 முதல் 44 வயதுடைய பெண்களிடையேக் கண்டறியப்படுகிறது.
தேசியப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் இந்தியாவில் முதன்முதலாக 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.