TNPSC Thervupettagam

கர்ரார்னாவுன் புஷ் வகை தக்காளி

January 2 , 2023 567 days 380 0
  • புஷ் வகை தக்காளியின் புதிய இனம் ஒன்று ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.
  • இது தற்போது உலகில் ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுகிறது.
  • சோலனம் என்ற தாவரப் பேரினத்தினைச் சேர்ந்த சுமார் 1,400 ஏற்றுக் கொள்ளப்பட்ட இனங்கள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • இந்த தாவரப் பேரினத்தினைச் சேர்ந்த இனங்கள் அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிக் காணப்படுகின்றன.
  • இது சோலனேசி குடும்பத்தில் உள்ள அதிக இனங்கள் கொண்டுள்ள பேரினமாகும்.
  • இது ஆஞ்சியோஸ்பெர்ம்களில் (பூக்கும் தாவரங்கள்) மிகப்பெரியதாகும்.
  • உயர் பொருளாதார மதிப்பைக் கொண்ட 3 உணவுப் பயிர்கள் இந்த இனத்தில் அடங்கும்.
  • அவை உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் கத்திரிக்காய் (பிரிஞ்சால்) ஆகியனவாகும்.
  • சோலனத்தைச் சேர்ந்த பெரும்பாலான இனங்கள் அமேசானிய வெப்பமண்டல தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.
  • இருப்பினும், அவை அதிகம் காணப்படும் பகுதிகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்