இந்தியாவின் கற்கரி வகை நிலக்கரியின் இறக்குமதியானது, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான (11 மாதங்கள்) காலக் கட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38.14 மில்லியன் டன்னாக (mt) உள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பீட்டுக் காலத்தில் சுமார் 38.12 மில்லியன் டன் ஏற்றுமதிகள் பதிவாகியதோடு வருடாந்திர (ஆண்டாண்டு) அடிப்படையிலான இறக்குமதிகள் சற்று அதிகமாக பதிவாகியுள்ளன.
60 சதவீதப் பங்குடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வருகிறது.
கனடா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இதில் மூன்றாவது பெரிய விநியோகஸ்தராக இடம் பெற்றுள்ளது.