சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு முதன்முறையாக கோதுமை மரபணுவை கண்டுபிடித்துள்ளனர். இக்குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 18 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கண்டுபிடிக்கப்பட்ட மரபணுவானது முழுமையான கோதுமை மரபணுவின் 94 சதவீதத்தைக் (14.5 Gigabases) கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில் துறையினால் (Department of Biotechnology) நிதியுதவி அளிக்கப்படுகிறது.
ரொட்டிக் கோதுமையானது கலப்பு ஹெக்சாபுளாய்டு மரபணுவைக் கொண்டுள்ளது. இது அரிசி மரபணுவை விட 40 மடங்கு பெரியதாகவும், மனித மரபணுவை விட 5 மடங்கு பெரியதாகவும் உள்ளது.
உயர்தரம் கொண்ட குறிப்புரை மரபணுவானது பருவநிலை மாற்றத்திற்கு தாக்குப் பிடிக்கும் கோதுமை வகைகளின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். இது வளர்ந்து வரும் உலக மக்கள் தொகையின் உணவுப் பிரச்சனைக்கு தீர்வு காணும். மேலும் இது உலக உணவுப் பாதுகாப்பு பிரச்சனைக்கு உதவும்.