TNPSC Thervupettagam

கலாச்சார பாரம்பரியத்திற்கான யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் விருது - 2018

November 12 , 2018 2125 days 660 0
  • 2018 ஆம் ஆண்டின் கலாச்சார மற்றும் பாரம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த 10 திட்டங்களை சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் குழு அங்கீகரித்துள்ளது.
  • இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டதின் 20வது ஆண்டை அனுசரிக்கும் விதமாக 2019 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெற்றியாளர்களுக்கு மலேசியாவின் பினாங்கில் இவ்விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விருதுகள் முதன்முதலில் மலேசியாவின் பினாங்கில் 1999ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன.
  • இந்த நிகழ்ச்சியானது மலேசியாவின் நகர புத்தாக்க கொள்கை அமைப்பின் சிந்தனை நகரத்துடன் இணைந்து நடத்தப்படவிருக்கிறது.
வ.எண் பிரிவு வெற்றி பெற்ற அமைப்பு நாடு
1. சிறப்புத்துவத்துக்கான விருது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க கால சிஜோ-சோபூன்-கோகோ புளோட் மச்சியாவைப் புதுப்பித்தல் ஜப்பான்
2. தனித்துவத்துக்கான விருது லாமோ மையம் லடாக்,  இந்தியா
3. சிறப்புத் தகுதிக்கான விருது 5 மார்டின் இடம் சிட்னி, ஆஸ்திரேலியா
அஜிங் ஜூவாங் புஜியான், சீனா
ஹோன்ஜோ கிடங்கின்              வணிக வங்கி சய்தாமா, ஜப்பான்
4. மாண்புமிகு குறிப்பீடுகள் ஹெங்டாஹெசி நகரம் ஹெய்லோன்ஜியாங், சீனா
ராஜாபாய் கடிகார கோபுரம்  மற்றும் மும்பை நூலகப் பல்கலைக்கழக கட்டிடம் மும்பை, இந்தியா
ருட்டோன்சீ முல்ஜி ஜேதா பவுண்டேஷன் மும்பை, இந்தியா
5. பாரம்பரிய சூழலில் புதிய வடிவமைப்பு கௌமாய் பண்ணை 1955 சியாங் மாய், தாய்லாந்து
ஹார்ட்ஸ் ஆலை அடிலெய்டு துறைமுகம், ஆஸ்திரேலியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்