TNPSC Thervupettagam

கலியா திட்டம் - ஒடிசா

December 27 , 2018 2033 days 658 0
  • ஒடிசா மாநிலமானது சமீபத்தில் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை அதிகப்படுத்துவதற்கான க்ருஷாக் உதவித் திட்டம் (KALIA - Krushak Assistance for Livelihood and Income Augmentation) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இது சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டத்தின்படி காரிப் மற்றும் ராபி பருவங்களில் தலா 5000 ரூபாய் என மொத்தமாக 10000 ரூபாய் சாகுபடி செய்வதற்கான நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கப்படும்.
  • 2018 - 19 ஆம் ஆண்டு முதல் 2021 - 22 வரை மூன்று ஆண்டுகளின் 5 பயிர் பருவங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.
  • இது நேரடி பயன் பரிமாற்ற (DBT - Direct Benefit Transfer) முறையில் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்