TNPSC Thervupettagam

கலிவேலி சதுப்புநிலங்கள் - பறவைகள் சரணாலயம்

February 9 , 2021 1260 days 607 0
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • கலிவேலி சதுப்புநிலங்களைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கும் முயற்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இது சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளை அதிகரிக்கச் செய்யும்.
  • கலிவேலி சதுப்புநிலங்கள் தென்னிந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய உவர்நீர் ஏரியாகும்.
  • முதலாவது மிகப் பெரிய உவர்நீர் ஏரி புலிகாட் ஏரியாகும்.
  • கலிவேலி ஏரியானது வங்காள விரிகுடாவோடு உப்புக் கள்ளி சிற்றோடை மற்றும் இடையந்திட்டு சரணாலயம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சதுப்புநிலத்தின் தெற்குப் பகுதியானது 2001 ஆம் ஆண்டில் ஒரு பாதுகாக்கப் பட்ட நிலமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்