TNPSC Thervupettagam

கலீத் ஹோசினியின் ‘கடல் பிரார்த்தனை ‘(Sea Prayer)

August 26 , 2018 2281 days 755 0
  • அதிக விற்பனையான தி கைட் ரன்னர் (The Kife Runner) புத்தகத்தின் எழுத்தாளரான கலீத் ஹோசினி தனது சமீபத்தியப் புத்தகமான ‘Sea Prayer’ ஐ விரைவில் வெளியிட உள்ளார்.
  • இப்புத்தகமானது செப்டம்பர் 2015ல் துருக்கி கடற்கரையில் சடலமாகக் கிடந்த 3 வயது சிரிய நாட்டுச் சிறுவனுக்கு காணிக்கையாகும்.
  • இந்தப் புத்தகமானது ப்ளும்ஸ்பெரியால் வெளியிடப்படுகிறது.
  • முன்னதாக ‘Sea Prayer’ ஆனது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருடன் (UNHCR – United Nations High Commissioner for Refugees) இணைந்து வழங்கப்பட்ட ஒரு ‘மெய்நிகர்‘ திரைப்படமாகும்.
  • கலீத் ஹோசினி ஒரு ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க நாவலாசிரியர் ஆவார்.
  • இவர் ‘தி கைட் ரன்னர்’, ‘எ தௌசண்ட் ஸ்பெலண்டிட் சன்ஸ்’ மற்றும் ‘அண்ட் தி மௌண்டெயன்ஸ் எக்கோவ்டு‘ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • முன்னதாக இவர் UNHCRன் நல்லெண்ண தூதுவராக 2006ல் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்