அதிக விற்பனையான தி கைட் ரன்னர் (The Kife Runner) புத்தகத்தின் எழுத்தாளரான கலீத் ஹோசினி தனது சமீபத்தியப் புத்தகமான ‘Sea Prayer’ ஐ விரைவில் வெளியிட உள்ளார்.
இப்புத்தகமானது செப்டம்பர் 2015ல் துருக்கி கடற்கரையில் சடலமாகக் கிடந்த 3 வயது சிரிய நாட்டுச் சிறுவனுக்கு காணிக்கையாகும்.
இந்தப் புத்தகமானது ப்ளும்ஸ்பெரியால் வெளியிடப்படுகிறது.
முன்னதாக ‘Sea Prayer’ ஆனது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருடன் (UNHCR – United Nations High Commissioner for Refugees) இணைந்து வழங்கப்பட்ட ஒரு ‘மெய்நிகர்‘ திரைப்படமாகும்.
கலீத் ஹோசினி ஒரு ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க நாவலாசிரியர் ஆவார்.
இவர் ‘தி கைட் ரன்னர்’, ‘எ தௌசண்ட் ஸ்பெலண்டிட் சன்ஸ்’ மற்றும் ‘அண்ட் தி மௌண்டெயன்ஸ் எக்கோவ்டு‘ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
முன்னதாக இவர் UNHCRன் நல்லெண்ண தூதுவராக 2006ல் நியமிக்கப்பட்டார்.