TNPSC Thervupettagam

கலை மற்றும் கலாச்சாரம் - விருதுகள்

March 10 , 2019 1960 days 755 0
  • நடனம் மற்றும் இசை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மீதான திறமை மற்றும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக கலாச்சாரத் துறையில் பல்வேறு விருதுகளை அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ஸ்ரீமனாதா சங்கர்தேவ் விருது 2017
    • அஸ்ஸாம் மாநிலத்தின் சத்திரியா நடனம், இசை மற்றும் நாட்டுப்புறக் கலாச்சாரம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு பணியாற்றியதற்காக பார்பெட்டா சத்தராவின் சத்திரியப் பிரதிநிதியான புகழ்பெற்ற பசிஸ்ததேவ் சர்மாவிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மாதவ்தேவ் விருது 2016
    • இவ்விருதானது மயமோரா டின்ஜோய் சதாராவின் ஜுகதானந்தா சந்திரா கோஸ்சாமிக்கு வழங்கப்படவிருக்கிறது.
    • இவர் மயமோரா டின்ஜோய் சதாராவில் கையெழுத்துப் பிரதியை பாதுகாப்பதற்காகவும் தேசிய அளவில் சத்திரிய நடனம் மற்றும் இசையை அங்கீகரிப்பதற்காகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றார்.
  • மாதவ்தேவ் விருது 2019
    • இவ்விருதானது புகழ்பெற்ற நடனக் கலைஞர், வரலாற்று அறிஞர், விமர்சகர் மற்றும் அறிஞரான டாக்டர் சுனில் கோத்தாரிக்கு வழங்கப்படவிருக்கிறது.
    • இவர் பாரம்பரிய நடனத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அது சார்ந்த வடிவங்கள் குறித்த தனது 12 புத்தகங்களின் மூலம் நாட்டின் கலாச்சாரத் துறையை மேம்படுத்தினார்.
  • காளிச்சரண் பிரம்மா விருது 2018
    • இவ்விருதானது உடல்குரி ஹரிகிருஷ்ணா மஹந்தாவின் போரோகஜுலி ஸ்ரீமந்த சங்கரதேவ் சதாராவிற்கு வழங்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்