8-வது மேடைக் கலைகளுக்கான உலக ஒலிம்பிக் (Global Theatre Olympics) புதுதில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக மேடைக் கலைகளின் (theatrical arts) பிரம்மாண்ட காட்சித் தளமான இது இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட உள்ளது.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்டும் தேசிய நாடகப்பள்ளி (National School of Drama) இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருக்கின்றது.
இந்த 8-வது மேடைக் கலைகளுக்கான உலக ஒலிம்பிக்கின் கருத்துரு – “நட்புறவிற்கான கொடி” (Flag of Friendship) .
30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 25,000 சர்வதேசக் கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
“ஒரே பாரதம் சிறந்த பாரதம்” (EK Bharat Shreshtha Bharat) என்பதை கருப்பொருளாக கொண்டு இந்தியா சார்பாக சுவாங்க் (Swang), ராஸ்லீலா (Rasleela), நவ்தன்கி (Nautanki), பந்த் பாதர் (Bhand Pather), ஜட்ரா (Jatra) போன்ற கலைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மேடைக் கலைகளுக்கான உலக ஒலிம்பிக் நிகழ்ச்சியானது 1993 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் டெல்பியில் (Delphi) தொடங்கப்பட்டது.
மேடைக் கலை (theatrical art) எனும் ஊடகம் மூலம் வெவ்வேறு கலாச்சாரம், நம்பிக்கை ,சிந்தனையுடைய மக்களை ஒரு இடத்தில் கூட்டுவதும், எல்லைகளின் இடைவெளியை குறைத்து உறவுப்பாலம் அமைப்பதும் இதன் நோக்கங்களாகும்.
தேசிய நாடகப் பள்ளி
தேசிய நாடகப் பள்ளி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேடை கலைப் பயிற்சிக்கான ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்.
இது புதுதில்லியில் அமைந்துள்ளது.
1959 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி (Sangeet Natak Akdemi) ஆல் இது தோற்றுவிக்கப்பட்டது.