பாரம்பரிய மற்றும் சமகால ஓவியம் மற்றும் சிற்பக்கலைக்குப் பங்காற்றிய மூன்று ஓவியர்கள் மற்றும் மூன்று சிற்பிகளுக்கு தமிழக அரசு கலைச்செம்மல் விருதுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விருதுகள் ஆனது கலை மற்றும் சிற்பத் துறையினால் வழங்கப்படுகின்றன.
பாரம்பரிய கலைப் பிரிவில் விருது வழங்கப்படுவதற்காக மணிவேலு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
பாரம்பரிய சிற்பப் பிரிவில் விருது வழங்கப்படுவதற்காக L. பாலச்சந்திரன் மற்றும் K. கன்னியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நவீன கலைப் பிரிவில் விருது வழங்கப் படுவதற்காக K. முரளிதரன் மற்றும் A. செல்வ ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் R. ராகவன் நவீனச் சிற்பங்கள் பிரிவில் விருது பெற உள்ளார்.