2024-25 ஆம் ஆண்டிற்கான 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு 3.10 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் 3,100 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.
மாநில அரசிடமிருந்துப் பெறப்படும் 2,369 கோடி ரூபாய் நிதியைத் தவிர்த்து, நிதிப் பகிர்வு மூலமான சுமார் 714 கோடி ரூபாய் மற்றும் சுரங்க நிதியிலிருந்து பெறப்பட்ட 15 கோடி ரூபாய் நிதிகளும் இந்த மாநில அளவிலான வீட்டுவசதித் திட்டத்திற்குப் பயன் படுத்தப்பட உள்ளன.
இந்த மூன்று நிதி மூலங்களிலிருந்து ஏற்கனவே 1,549 கோடி ரூபாய் நிதி பெறப் பட்டு உள்ளது.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் (PVTG) சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் தேசியத் திட்டத்திற்காக 108.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் வசிக்கும் ஆறு PVTG சமூகங்களான இருளர்கள், காட்டுநாயக்கர்கள், கோத்தர்கள், குரும்பர்கள், பனியர்கள் மற்றும் தோடர்கள் ஆகிய இனங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.
அவர்களுக்காக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் வீடுகள் கட்டப்பட உள்ளன.
இதில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு வீட்டிற்கானச் செலவினமானது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப் படுகிறது.
இந்திய அரசு ஆனது, இந்தத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான இலக்காக 4,811 வீடுகள் என்று நிர்ணயித்துள்ளது என்ற நிலையில் மேலும் 2024-25 ஆம் ஆண்டிற்கான இலக்காக 6,885 வீடுகளை நிர்ணயித்துள்ளது.