TNPSC Thervupettagam

கலைஞர் கைவினைத் திட்டம் 2025

April 22 , 2025 6 days 94 0
  • தமிழக முதல்வர் 'கலைஞர் கைவினைத் திட்டம்' என்ற கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது மத்திய அரசின் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கான ஒரு மாற்றாக மாநில அரசின் ஒரு திட்டமாக செயல்படும்.
  • இது மிகவும் உள்ளடக்கிய ஒரு வகையிலான, விரிவான, மேலும் சாதி அடிப்படையில் பாகுபாடு கொண்டிராத திட்டமாக இருக்கும்.
  • இந்தத் திட்டமானது 25 தொழில்களை உள்ளடக்கியது என்பதோடு கூடுதலாக யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி ஒரு தொழிலைத் தொடரலாம்.
  • கலைஞர் கைவினைத் திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 35 வயது ஆகும்.
  • இதில் அரசானது மானியத்துடன் சேர்த்து 50,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை வழங்கும்.
  • 2023 ஆம் ஆண்டில், மத்திய அளவில் மத்திய அரசானது விஸ்வகர்மா திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டம் ஆனது, 18 தொழில்களை உள்ளடக்கியதாகவும், திறன் மேம்பாடு மற்றும் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்