சமூக நீதியின் அடிப்படையில் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் தமிழ்நாடு மாநில அரசானது 'கலைஞர் கைவினைப் பொருட்கள் திட்டத்தினை' செயல்படுத்த உள்ளது.
25 வணிகங்கள்/கைவினைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய வர்த்தகத்தை அடிப்படை ஆக கொண்டதல்ல.
இது மானியத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடன் ஆதரவு, அதற்கான திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு ஆகியவற்றுடன் தற்போதுள்ள வர்த்தகத்தை நன்கு விரிவுபடுத்துவதற்கும் புதிய முன்னெடுப்புகளைத் தொடங்குவதற்கும் திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 25 சதவீத மானியம் (அதிகபட்சம் 50,000 ரூபாய்), 5 சதவீத வட்டி மானியம் மற்றும் தேவையான அனைத்து ஆதரவையும் உள்ளடக்கிய 3 லட்சம் ரூபாய் கடன் ஆதரவு வழங்கப்படும்.