TNPSC Thervupettagam

கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டம்

August 27 , 2021 1246 days 2989 0
  • கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்றினால் தங்களது வேலைகளை இழந்த நகர்ப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க வேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் C. ரங்கராஜன் தலைமையிலான குழு பரிந்துரைத்திருந்தது.  
  • நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் சமூக நலக் கூடம், சந்தைகள், நவீன நூலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு இதன் மூலம் உருவாக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்