2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு 8 எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவித்திருக்கின்றது.
தமிழ் கலாச்சாரத்திற்குப் பங்களிப்புகளை அளித்த நடிகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
இம்முறை விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் பிரபுதேவா போன்ற திரை நடிகர்கள் உள்பட 201 கலைஞர்கள் இவ்விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.
மேலும் அரசு இலக்கியத் துறையில் பாரதி விருதுகளையும், இசைத் துறையில் M.S. சுப்புலட்சுமி விருதுகளையும், நடனத் துறையில் பால சரஸ்வதி விருதுகளையும் அறிவித்தது.
M.S. சுப்புலட்சுமி விருதிற்காக பாடகர்கள் S. ஜானகி, பம்பாய் சகோதரிகளான சி. சரோஜா மற்றும் சி. லலிதா மற்றும் T.V. கோபால கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
பாரதி விருதிற்காக பாடலாசிரியர் புலமைப்பித்தன், புகழ்பெற்ற வில்லுப்பாட்டுக் கலைஞரும் பாடலாசிரியருமான சுப்பு ஆறுமுகம் மற்றும் எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான சிவசங்கரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
பால சரஸ்வதி விருதிற்காக வைஜயந்தி மாலா, V.P. தனஞ்செயன் மற்றும் C.V. சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.