மத்தியத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CPCRI) ஆனது, ‘கல்ப சுவர்ணா’ என்ற புதிய குட்டை ரக தேங்காய் ரகத்தினையும், இரண்டு புதிய கலப்பின கோக்கோ ரகங்களையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட கோக்கோ ரகங்களில் ஒன்று, கர்நாடகா மற்றும் கேரளாவின் அதிக மழைப்பொழிவு மிக்க பகுதிகளில் அதிகமாக காணப்படும் நெற்று கரும்புள்ளி அழுகல் நோய்த் தாக்குதலை எதிர்க்கும் திறன் கொண்டது.
'கல்ப சுவர்ணா’ ரகம் ஆனது இளநீர் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றது.
VTL CH I மற்றும் VTL CH II எனப்படும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோக்கோ வகைகள் அதிக கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன.
VTL CH I ரகமானது அதிக மகசூல் தரக்கூடியது என்பதோடு இதனைப் பாக்கு மற்றும் தென்னைத் தோட்டங்களில் ஊடு பயிராகவும் பயிரிட இயலும்.